பட்டப்பகலில் கோயில் உண்டியலை உடைத்த வாலிபர் கைது குடியாத்தம் அருகே

குடியாத்தம், ஆக.9: குடியாத்தம் அருகே பட்டப்பகலில் கோயில் உண்டியலை உடைத்து தூக்கி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். குடியாத்தம் அடுத்த கோப்பம்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று பட்டப்பகலில் அந்த உண்டியலை மர்ம நபர் ஒருவர் உடைத்து தூக்கி சென்றார். இதனை கண்டதும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து அவரை விரட்டி பிடித்து குடியாத்தம் தாலுகா போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்ம நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரியன்(34) என்பதும், இவர் அணைக்கட்டுப் பகுதியில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் பிரியன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி