பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்த ஒன்றிய அரசை கண்டித்து கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஆக.2: நாகப்பட்டினம் நீலா தெற்கு வீதி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மெயின் கிளை முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்த பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு 6 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகப்பட்டினம் நீலா தெற்கு வீதி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மெயின் கிளை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் மாரிமுத்து(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), சிவகுருபாண்டியன்(சிவகுருபாண்டியன்) ஆகியோர் தலைமை வகித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம் வடக்கு ஒன்றிய செயலலலாளர் ராஜா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சரபோஜி ஆகியோர் பேசினர். ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்த பாஜக அரசை கண்டிப்பது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டிப்பது ஆகிய கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகப்பட்டினம் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் வடிவேல், செல்லதுரை, நாகப்பட்டினம் நகர செயலாளர்கள் வெங்கடேசன், குணாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி