படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை ‘கிளிக்’ செய்த கலெக்டர்: பஸ் பறிமுதல்

நாகை: தனியார் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்த மாணவர்களை கலெக்டர் தனது செல்போனில் படம் பிடித்து அனுப்பி நடவடிக்கை எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்கின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. இதையடுத்து படிக்கட்டில் தொங்கி செல்லும் மாணவ, மாணவிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாகை மண்டலத்தில் 21 அரசு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது. நேற்று வேதாரண்யத்தில் இருந்து நாகை நோக்கி சென்ற தனியார் பஸ்சில் படிக்கட்டுகளில் தொங்கியபடி புத்தக பையுடன் பள்ளி மாணவர்கள், பயணிகள் பயணித்தனர். அந்த சமயத்தில் வேதாரண்யம் நோக்கி காரில் சென்ற கலெக்டர் அருண் தம்புராஜ், ‘’தனது செல்போன் மூலம் படிக்கட்டில் தொங்கியவர்களை போட்டோ எடுத்து உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபு, நாகை அருகே புத்தூர் ரவுண்டானாவுக்கு சென்று ஆய்வு செய்து படிக்கட்டில் தொங்கியப்படி பயணிகள் பயணித்ததால்  அந்த தனியார் பஸ்சை சிறைபிடித்தார். அதில் வந்த பயணிகளை வேறு பஸ்சில் ஏற்றி விட்டுவிட்டு தனியார் பஸ், கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். கலெக்டரிடம் எழுத்துப்பூர்வமாக பஸ் உரிமையாளர்கள் கடிதம் கொடுத்த பின்னர் வட்டார போக்குவரத்து துறை சார்பில், அபராதம் விதித்து பஸ் விடுவிக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்