படப்பை அரசு பள்ளியில் நடந்த 10ம் வகுப்பு தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம்: படப்பை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தினை கலெக்டர் ஆர்த்தி நேரில் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ளவர்களின் விவரம் வருமாறு: தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நேற்று (6.4.2023) தொடங்கியது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8,445 மாணவர்கள், 7,989 மாணவிகள் என மொத்தம் 16,434 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு, 5 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 6 கூடுதல் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 65 தேர்வு மையங்களுக்கு 65 முதன்மை கண்காணிப்பாளர்கள், 6 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர், 65 துறை அலுவலர்கள், 7 கூடுதல் துறை அலுவலர்கள், 11 வழித்தட அலுவலர்கள், 81 பறக்கும் படை அலுவலர்கள், 1,010 அறை கண்காணிப்பாளர்களும், சொல்வதை எழுதுபவர்களாக 105 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு மையங்களுக்கு, நியமனம் செய்யப்பட்டு தேர்வு தொடங்குவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் இருந்தன. இந்நிலையில், நேற்று காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அரசு பொண்கள் மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவிகள் தேர்வு எழுதும் மையத்தினை கலெக்டர் ஆர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன், மாவட்ட கல்வி அலுவலர் வள்ளிநாயகம், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிசெல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை