படகில் இலங்கைக்கு கடத்த முயன்ற 2 கோடி கஞ்சா பறிமுதல்

நாகை: ஆந்திராவிலிருந்து நாகை வழியாக விசைப்படகில் இலங்கைகக்கு கஞ்சா கடத்துவதாக தனிப்படை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நாகை கீச்சாங்குப்பம் ரெட்டை பனைமரத்தடி அருகே படகு அணையும் இடத்தில் நிறுத்தியிருந்த படகுகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அக்கரைப்பேட்டையை சேர்ந்த மோகன்(37) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பண்டல், பண்டல்களாக கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது.இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சாவை பைக்கில் கொண்டுவந்து நாகை வழியாக இலங்கைக்கு விசைப்படகில் கடத்த முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசைப்படகு உரிமையாளர் மோகன் உட்பட 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான 400 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள விசைப்படகு, 4 பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். …

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது