பஞ்.தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் திடீர் தர்ணா

ஆத்தூர், நவ.9: ஆத்தூர் அருகே, பைத்தூரில் வளர்ச்சி திட்ட பணிகள், தங்களுக்கு தெரியாமலே நடத்தப்படுவதாக கூறி ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்தூர் அருகே பைத்தூர் கிராம ஊராட்சியில், 12 வார்டுகள் உள்ளது. திமுகவைச் சேர்ந்த கலைச்செல்வி தலைவராக உள்ளார். நேற்று காலை, ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு, ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி மற்றும் வார்டு உறுப்பினர்கள் வந்தனர். பின்னர், அவர்கள் அங்கிருந்த பொறியியல் பிரிவு அலுவலர்களிடம் சென்று, கிராம ஊராட்சி பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு தெரியாமலே தன்னிச்சையாக நடைபெறுகிறது என முறையிட்டனர். அதற்கு அதிகாரிகள் முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த ஆத்தூர் பிடிஓ செந்தில், பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களது கோரிக்கை குறித்து உரிய விசாரணை நடத்தி, விவரங்கள் தெரிவிக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை