பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து சென்னையில் பாஜ ஆர்ப்பாட்டம்; ஊர்வலமாக செல்ல முயன்ற தலைவர்கள் கைது

சென்னை:  பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து சென்னையில் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஊர்வலமாக சென்ற முயன்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். பிரதமர் வருகையின் போது பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுத்திய பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்தும், கண்டித்தும், உடனடியாக பஞ்சாப் முதல்வர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சென்னையில் நேற்று பாஜவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டினப்பாக்கத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் பாஜ தேசிய பொது செயலாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், துணை தலைவர் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், நடிகை குஷ்பு, கராத்தே தியாகராஜன், மீனவர் அணி தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து  சுதாகர் ரெட்டி, பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜவினர் மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஊர்வலம் செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் சட்டசபை முடிந்து தர்ணா போராட்டம் நடைபெறுவதை கேள்வியுற்று, பாஜ எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து பாஜவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் பரபரப்பும் ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜ தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மயிலாப்பூரில் உள்ள சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். தீப்பந்தம் போராட்டம்:   பாஜ இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம், பாஜ தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா எம்.பி.,  தலைமையில் சவுகார்பேட்டை, தங்கசாலையில் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடந்தது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை