பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு: 3 பேர் உயிரிழப்பு

லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் உள்ள 3வது தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்களில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குடும்ப நல வழக்குகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் என விசாரிக்கக்கூடிய ஒருங்கிணைந்த கீழமை நீதிமன்றம் செயல்பட்டு வந்த நிலையில் 3வது தளத்தில் இருந்த ஒரு கழிவறைக்குள் திடீரென வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. பின்னர் குண்டுவெடித்துள்ள நிலையில் தகவல் கிடைத்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் அங்கிருந்த இருவர் உடனடியாக உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள சூழலில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். காவல்துறையினர் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வழக்கறிஞர்கள் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது அங்கேயே போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுடன் பணி புரிபவர்களுக்கும் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத ஒரு சூழல் இருக்கிறது என்ற சூழலை முன்வைத்து இருக்கின்றனர். நாட்டு வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டிருக்கமா என்கிற சந்தேகமும் அங்கிருப்பவர்களால் எழுப்பப்பட்டு வருகிறது. காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் காயமடைந்துள்ளவர்களையும் மீட்கக்கூடிய பணிகளும் நடந்து வருகிறது. வேறு எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் மாநிலம் முழுவதும் நடந்துவிடாமல் இருக்க பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ள சூழலில் இந்த குண்டுவெடிப்பு ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது….

Related posts

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி

உலக புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: 2வது நாளாக நடந்த தேரோட்டத்தில் லாட்சக்கணக்கானோர் பங்கேற்பு

வழக்கறிஞரை அதிகமுறை சந்திக்க அனுமதி கோரிய கெஜ்ரிவால் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு