பஞ்சாப் காவல் நிலைய குண்டுவெடிப்பு வழக்கு; காலிஸ்தானி தீவிரவாதியின் 2 உதவியாளர்கள் கைது: கிணற்றில் மறைத்து வைத்திருந்த டிபன் பாக்ஸ் குண்டுகள் மீட்பு

அமிர்தசரஸ்: பஞ்சாப் காவல் நிலைய குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய காலிஸ்தானி தீவிரவாதியின் இரண்டு உதவியாளர்களை போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் மாநில தேர்தல் கடந்த மாதம் நடைபெற்ற போது, ரோபர் காவல்நிலைய குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இச்சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், காவல் நிலையத்தின் பக்கவாட்டுச் சுவர் சேதமடைந்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த காலிஸ்தானி தீவிரவாதி ஹரிந்தர் சிங் ரிண்டாவின் உதவியாளர் இருவரை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர். இமாச்சல பிரதேசத்தில் பதுங்கியிருந்த அவர்களிடம் இருந்து டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை போலீசார் மீட்டனர். முன்னதாக மேலும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 9 மி.மீ துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்கள் மீட்கப்பட்டன. இந்த டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் யாவும் இமாச்சல்-பஞ்சாப் எல்லையில் உள்ள கிராமத்தின் பயன்பாடற்ற கிணற்றில் இருந்து மீட்கப்பட்டவையாகும். தேடப்பட்டு வரும் காலிஸ்தானி பயங்கரவாதி ஹரிந்தர் சிங் ரிண்டா மீது இந்தியாவில் 25க்கும் மேற்பட்ட கொடூரமான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தற்போது அவன் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் பாதுகாப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் எஸ்பி சந்தீப் சர்மா கூறுகையில், ‘காவல் நிலைய குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ​லூதியானாவை சேர்ந்த குல்தீப் குமார் என்பவர் முதலில் கைது செய்யப்பட்டார். கடந்த இரண்டு நாட்களில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் குல்தீப் குமாருக்கு இரண்டு வெடிகுண்டுகளை வழங்கியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர். …

Related posts

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து