பஞ்சாபில் ஊடுருவிய பாகிஸ்தான் டிரோன்

சண்டிகர்: பஞ்சாபில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் டிரோனை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார்கள். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் எல்லைப் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதிகாலை 4.30 மணியளவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து எல்லைக்குள் டிரோன் ஒன்று ஊடுருவியது. இதனை பார்த்து உஷாரான எல்லைப் பாதுகாப்பு படையினர் உடனடியாக டிரோன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். 17 ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இருட்டாக இருந்ததால் ஒளிரும் குண்டுகள் வீசி டிரோன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கயிறு ஒன்றும் கட்டப்பட்டு இருந்தது. சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனை தேடும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்….

Related posts

செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நான் எதிர்நோக்குகிறேன்.! பிரிட்டனின் புதிய பிரதமராக வெற்றி பெற்றுள்ள கீர் ஸ்டார்மர்க்கு பிரதமர் மோடி வாழ்த்து

மோடி அரசு ஆகஸ்ட்-ல் கவிழ்ந்துவிடும் : லாலுபிரசாத்