பச்சை வயலில், வெள்ளை நிற நாரைகள் கரூர் பழைய திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த வேண்டும்

கரூர், ஏப். 21: கரூர் பழைய திண்டுக்கல் சாலையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மைய பகுதியில் பழைய திண்டுக்கல் சாலை உள்ளது. ஜவஹர் பஜார் பகுதியில் இருந்து மக்கள் பாதை, லைட்ஹவுஸ் கார்னர், திருமாநிலையூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் பழைய திண்டுக்கல் சாலையின் வழியாக செல்கிறது.

இதே போல், லைட்ஹவுஸ் கார்னர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருநது கரூர் நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் பழைய திண்டுக்கல் சாலையின் வழியாகத்தான் சென்று வருகின்றன. இந்த சாலையின் இருபுறமும் வர்த்தக நிறுவனங்களும், மருத்துவமனை, அரசு அலுவலங்கள், திரையரங்கம் போன்றவை உள்ளது. இதன் காரணமாக இந்த சாலையில் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள இந்த சாலைக்கு வரும் கனகர வாகனங்கள் அனைத்தும் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் தினமும் நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கிக் கொண்டு எளிதில் வெளியேற முடியாத சூழல் அடிக்கடி நிலவி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய திண்டுக்கல் சாலையை கண்காணித்து கனரக வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதை கண்காணித்து தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை