பச்சையம்மன் சமேத மன்னார் சாமி கோயில் குளம் ₹40 லட்சத்தில் புனரமைப்பு அளவீடு செய்யும் பணிகள் தொடங்கியது கலசபாக்கம் அடுத்த காம்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த

கலசபாக்கம், ஜூலை 13: பச்சையம்மன் சமேத மன்னார் சாமி கோயில் குளம் ₹40 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்க அளவீடு பணி தொடங்கியது. கலசபாக்கம் அடுத்த காம்பட்டு கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க பழமை வாய்ந்த பச்சையம்மன் சமேத மன்னார் சாமி திருக்கோயில் உள்ளது. கோயிலுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து குலதெய்வ வழிபாடு செய்வது வழக்கம். குறிப்பாக ஆடி மாதம் 5 திங்கட்கிழமைகளிலும் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பொங்கலிட்டு வழிபட்டு நேர்த்திக் கடன் செலுத்துவர்.

பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க திருக்கோயில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருப்பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் எவ வேலு உறுதி அளித்தார். மேலும் தொகுதி எம்எல்ஏ பெசுதி சரவணன் இப்பகுதி மக்கள் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அமைச்சர்கள் எ.வ வேலு சேகர்பாபு ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தியதின் பேரில் கோயில் திருப்பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பணி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பிறகு 10ம் தேதி திருப்பணி மேற்கொள்ள பாலாலயம் பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் குளம் புனரமைக்க இந்து சமய மானிய கோரிக்கையில் ₹40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன்படி பணிகள் மேற்கொள்ள நேற்று குளம் அளவீடு பணிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க கோயில் குளம் பல ஆண்டு காலமாக பராமரிக்கப்படாமல் இருந்தது. தற்போது கோயில் குளம் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளதால் பொதுமக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோயில் குளம் அளவீடு பணியில் அறங்காவல் குழு தலைவர் ராமன் பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் சீனிவாசலு, ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது