பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக சத்யகோபால் நியமனம்

சென்னை: சத்யகோபாலை, பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்து டெல்லி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. கிரிஜா வைத்தியநாதனுடன், வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற சத்யகோபாலும், பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவருக்கு புனேயில் உள்ள மேற்கு மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, கே.சத்யகோபால் மறு உத்தரவு வரும் வரை தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக செயல்படுவார் என்று டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து சத்யகோபால் நேற்று முதல் சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டார்….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்