பசுமை தமிழகம் இயக்கம் திட்டத்தில் 2. 80 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம்: அலுவலர்களுடன் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பசுமை தமிழகம் இயக்கம் திட்டத்தில் 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலர்களுடன் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முழுவதும் பசுமை தமிழகம்  இயக்கம் திட்டத்தில் 360 நாற்றங்கால்களில் வளர்க்கப்பட்ட 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளின் முன்னேற்றம் குறித்து தலைமைச் செயலக வனத்துறை கூட்ட அரங்கில் இன்று ( 20.10.2022) மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் வனப் பரப்பை 33 சதவீதமாக உயர்த்திட, பசுமை தமிழக இயக்கத்தின் மூலம்   நடப்பாண்டு,  முதல் கட்டமாக  360 நாற்றங்கால்கள் மூலம் வளர்க்கப்பட்டுள்ள 2..80 கோடி மரக்கன்றுகள்  நடும் திட்டத்தை கடந்த 24.09.2022 அன்று தொடங்கி வைத்து சிறப்பித்துள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக வேளாண் பெருமக்கள், தொழில் நிறுவனங்கள்,  மக்கள் நலச் சங்கங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்கள் மரக்கன்றுகளை எளிதாகப் பெறும் பொருட்டு, பசுமை தமிழகம் இயக்கத்தின் இணையதள முகவரியில் (www.greentnmission.com) பயன்பாட்டாளர்கள் தங்களது சுய விபரங்களை பதிவு செய்து, தங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் பயனாக இதுவரை 7905 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். 12ஆயிரத்து 705. மரக்கன்றுகள் இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் தன்னார்வலர்கள், வேளான் பெருமக்கள் வழங்கியள்ளார்கள். இவ்வாண்டு நடவு செய்யப்பட வேண்டிய 2.50 கோடி  மரக்கன்றுகளையும் நடப்பு   மழைக்காலத்திலேயே  நடவு செய்திட அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும். இரண்டாம் ஆண்டில் 7.5 கோடி மரக்கன்றுகளும், மூன்றாமாண்டு 15 கோடி மரக்கன்றுகளும், நான்காம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 25 கோடி மரக்கன்றுகளும் நடவு செய்திட திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், இந்த இயக்கத்தின் திட்டப்படி 10 ஆண்டுகளுக்குள் தமிழகத்தின் நிலப் பரப்பை 33 சதவீதமாக உயர்த்திட இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நடவு செய்யப்பட வேண்டிய மரக்கன்றுகளை வளர்க்கவும், நடவு செய்திடவும், முழுமையாக வளர்ந்திட குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் சரியாக திட்டமிட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில்  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச்  செயலாளர் திருமதி சுப்ரியா சாஹு இ.ஆ.ப., அவர்கள், வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (துறைத் தலைவர்) திரு.சையத் முஜம்மில் அப்பாஸ், இ.வ.ப.,  வனத்துறை சிறப்புச் செயலாளர் திரு.கே.இராஜ்குமார் இ.வ.ப., பசுமை தமிழ்நாடு இயக்கம் இயக்குநர் திரு.தீபக் ஸ்ரீவஸ்தவா இ.வ.ப., கூடுதல் இயக்குநர் திரு.வி.சி.ராகுல் இ.வ.ப., மற்றும் அலுவலர்கள்  கலந்து கொண்டு பணிகளின் முன்னேற்றம் குறித்து தெரிவித்தார்கள்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை