பங்கு சந்தையில் விதிமீறல்: அம்பானி நிறுவனத்துக்கு அபராதம்

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் (செபி) பங்கு வர்த்தகத்தில் நடைபெறும் மோசடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2007ம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1 சதவீத பங்குகள் வீழ்ச்சி அடைந்த நேரத்தில் அதனை வாங்கி, விற்பனை செய்திருந்தது செபி விசாரணையில் கண்டறியப்பட்டது. இந்நிலையில், முறைகேடாக பங்கு வர்த்தகம் மேற்கொண்டது தொடர்பாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றும் அதன் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகே‌‌ஷ் அம்பானி மற்றும் மும்பை எஸ்இஎஸ் நிறுவனம், நவிமும்பை எஸ்இஎஸ் நிறுவனம் ஆகியவற்றிற்கு அபராதம் விதித்து செபி உத்தரவிட்டுள்ளது. இதன்படி ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு ரூ.25 கோடி, முகே‌‌ஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி, நவிமும்பை எஸ்இஎஸ் நிறுவனத்துக்கு ரூ.20 கோடி, மும்பை எஸ்இஎஸ் நிறுவனத்துக்கு ரூ.10 கோடி என்ற அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. …

Related posts

அக்-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!.

தங்கம் விலை சவரன் ரூ.57ஆயிரத்தை நெருங்குகிறது

மீண்டும் ஏற தொடங்கிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,960க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி