பங்குனி உத்திரத் திருவிழா: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு

கேரளா: பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை  திறக்கப்படுகிறது. புதன் கிழமை முதல் சன்னிதானத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் போா்டு அறிவித்துள்ளது. மாத பூஜையை முன்னிட்டு வரும் 12-ம் தேதி வரை  நடை திறந்து பூஜைகள் நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும் மாத பூஜையின் தொடர்ச்சியாக 18-ம் தேதி பங்குனி உத்திர ஆறாட்டு விழா தொடங்க உள்ளது. பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறந்து பூஜைகள் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து 12-ம் தேதி வரை தினமும் அதிகாலை 3.30 மணி முதல் 11 மணி வரை நெய்யபிஷேகமும் நடைபெறும் என கூறியுள்ளது. அதை 18-ம் தேதி இரவு பங்குனி மாத பூஜைகள் நிறைவடைந்து அன்றிரவு 10 மணிக்குக் கோயில் நடை சாத்தப்படும் என தேவஸ்தான போர்டு கூறியுள்ளது. மீண்டும் பங்குனி உத்திர விழாவுக்காக 18-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும். 19-ம் தேதி காலை 10 மணியளவில் தந்திரி தலைமையில் கொடியேற்றம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது….

Related posts

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தீவிரவாத ஊடுருவலை தடுக்க வங்கதேச எல்லையை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்: எல்லை பாதுகாப்பு படை நடவடிக்கை

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளால் இளநிலை ‘நீட்’ தேர்வு ரத்தாகுமா?: உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்