பங்குச்சந்தையில் அதிக லாபம் ஆசை காட்டி சாப்ட்வேர் நிறுவன ஊழியரிடம் ரூ.11 லட்சம் மோசடி

தேனி, ஜூலை 2: சாப்ட்வேர் நிறுவன ஊழியரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக தேனி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (29). தனியார் சாப்ட்வேர் நிறுவன ஊழியரான இவர் தேனி சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்தாண்டு சமூக வலைதள செயலியில் பங்குச்சந்தை குறித்து விளம்பரம் பார்த்தேன். இதையடுத்து அதில் குறிப்பிட்டிருந்த வாட்ஸ்-அப் குழுவில் இணைந்தேன்.

அந்த குழுவில் இருந்து சிலர் என்னை தொடர்புகொண்டு, பங்குச் சந்தையில் குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றனர். இதை நம்பிய நான், அவர்கள் கூறியபடி நிறுவனத்தில் ரூ.11.04 லட்சம் வரை முதலீடு செய்தேன். முதலீட்டு பணத்திற்கு 20 மடங்கு வரை லாபம் கிடைக்கும் என கூறினர். ஆனால், எனக்கு லாபமாக ரூ.31 ஆயிரம் மட்டுமே கிடைத்தது. நான் முதலீடு செய்த பணத்தையும் திரும்ப பெற முடியவில்லை. எனவே, எனது பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஜாலியாக உலா வந்த காட்டுயானை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் மறியலில் ஈடுபட முயன்ற டிட்டோ ஜாக் அமைப்பினர் 51 பேர் கைது

விக்கிரவாண்டி தொகுதியில் நீலகிரி திமுகவினர் பிரசாரம் கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில் கன மழை கரடி தாக்கி பெண் தொழிலாளி படுகாயம்

பூத்து குலுங்கும் டெய்சி மலர்கள்