பக்ரீத் பண்டிகையினையொட்டி கொங்கணாபுரம் வாரச்சந்தையில் 11 ஆயிரம் ஆடுகள் விற்பனை: ரூ.8 கோடிக்கு வர்த்தகம்

இடைப்பாடி: கொங்கணாபுரத்தில் இன்று கூடிய வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையினையொட்டி 11ஆயிரம் ஆடுகள் விற்பனையானது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் சனி சந்தை வாரந்தோறும் நடைபெறுகிறது. பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 11000 ஆடுகளை வியாபாரிகள் மற்றும்விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.5400 முதல் ரூ. 6600 வரையும், 10 கிலோ எடை உள்ள கிடாய் ரூ.5400 முதல் ரூ. 6600 வரையும்,   20 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ரூ. 11000 முதல் ரூ.13400 வரையும், வளர்ப்பு குட்டி ஆடு ரூ.2500 முதல் ரூ.3000 வரையும் விலை போனது. பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், கறிக்கடைக்காரர்கள் வந்திருந்து  ஆடுகளை வாங்கிச்சென்றனர். இவை தவிர 3500 பந்தயசேவல், கோழிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. காகம், கீரி, செங்கருப்பு ,மயிலே ,சுருளி ஆகிய ரகத்தைச் சேர்ந்த பந்தய சேவல்கள் ரூ.1000 முதல் ரூ.3500 வரை விலைபோனது. பந்தய சேவலை ஒன்றுடன் ஒன்று மோத விட்டு தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டது. ஒரு கோழி ரூ.100 முதல் ரூ.1000 வரை விலை போனது. ஆடு, மாடுகளுக்கான அலங்கார கயிறுகள், சலங்கைகள் ரூ. 10 முதல் ரூ. 100 வரை விற்பனை செய்யப்பட்டது. இவை தவிர காய்கறிகள் 135 டன் கொண்டுவரப்பட்டிருந்தது. இதில் 60 கிலோ எடை கொண்ட சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ரூ.1000 முதல் ரூ. 1400 வரையும். தக்காளி கிலோ ரூ. 12 முதல் ரூ. 17 வரை விலை போனது. சந்தையில் இன்று ரூ.8 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்….

Related posts

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

போலி பட்டா: மதுரை ஆட்சியர் ஆஜர்

பூவலம்பேடு பகுதியில் கடையில் பெட்ரோல் குண்டு வீசியதை கண்டித்து மறியல்