பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் ஜூனில் மின்னணு ஏலம்: தேவஸ்தானம் தகவல்

திருமலை: திருப்பதியில் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் ஜூன் 16,17ம் தேதிகளில் மின்னணு ஏலம் விடப்பட உள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியலில் பணம் மற்றும் நகைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இதில் கிடைத்த ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா நாடுகளின் வெளிநாட்டு நாணயங்கள் ஜூன் 16, 17ம் தேதிகளில் மின்னணு ஏலம் விடப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு மார்க்கெட்டிங் துறை பொது மேலாளர் (ஏலம்) அலுவலகத்தை 0877-2264429 என்ற எண்ணிலும், gmauctionsttdd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், மாநில அரசின் இணையதளம் www.konugolu.ap.gov.in அல்லது www.tirumala.org இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம்’’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.8 மணி நேரம் காத்திருப்பு: திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்டம் வளாகத்தில் உள் ள 29 அறைகளும் நிரம்பி வழிவதால், 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கை நேற்று முன்தினம் நள்ளிரவு எண்ணப்பட்டது. அதில், ₹4.83 கோடி காணிக்கை கிடைத்தது….

Related posts

பயணிகளின் உடைமைகளை தவறவிடுவதில் ஏர் இந்தியா முதலிடம்!

மராட்டியத்தில் வரலாற்று புகழ்பெற்ற ராய்கட் கோட்டையை சூழ்ந்த பெருவெள்ளம்: 30 சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் சிக்கினர்

பீகாரின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழப்பு