பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் வேண்டும்: அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசால் கடந்த 2012ம் ஆண்டு 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். தற்பொழுது இவர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.10 ஆயிரம் அளிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இந்த ஊதியமானது போதுமானதாக இல்லை. பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இனிமேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

Related posts

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…