பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஓய்வு வயது ‘60’: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் தற்போது பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: கடந்த 2012ம் ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தற்போது மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பு ஊதியம்  வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக அரசு உயர்த்தியுள்ள நிலையில், பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதும் 60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், தொழில் கல்வி பாடங்கள், தையல் போன்ற பாடங்களை இவர்கள் நடத்துகின்றனர். மற்ற ஆசிரியர்கள் போல இவர்களும் 60 வயது வரை பணியாற்றலாம்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை