நோய் எதிர்ப்பு சக்தி, தடுப்பூசியால் பாதிப்பு குறைவு டிசம்பர் – பிப்ரவரியில் கொரோனா 3ம் அலை: அபாயகரமாக இருக்காது: நிபுணர்கள்

புதுடெல்லி: டிசம்பர் இறுதியில் இருந்து பிப்ரவரிக்குள் 3வது அலை ஏற்படலாம் என்று கூறி உள்ள நிபுணர்கள், 2வது அலையை போல் இது அபாயகரமானதாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா 2வது அலை கடுமையான உயிர் பலியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். 2ம் அலையைத் தொடர்ந்து, ‘துர்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நடப்பதால் அக்டோபர்-நவம்பரில் 3வது அலை தாக்கும்,’ என நிபுணர்கள் எச்சரித்தனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. மாறாக, கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.தற்போது குளிர்காலம் தொடங்கும் நிலையில். கொரோனாவின் பாதிப்பு நிலை குறித்து நிபுணர்கள் கூறியிருப்பதாவது: கொரோனா 2வது அலையில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு குணமடைந்து, இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி பெற்றுள்ளனர். அதோடு அவர்கள் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். தொற்றிலிருந்து குணமடைந்தும், தடுப்பூசியாலும் பலரும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றுள்ளதே தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதற்கு முக்கிய காரணம்.இந்தியாவில் செரோ சர்வே அறிக்கையின்படி, 67.6 சதவீதம் பேர் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றுள்ளனர். தகுதியானவர்களில் 82 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 43 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர். எனவே, 2வது அலையை போல் அபாயகரமான மற்றொரு அலை இந்தியாவில் ஏற்பட வாய்ப்பில்லை. அதே சமயம், புதிய வீரியமிக்க வைரஸ் உருவாதல், குளிர்காலம் காரணமாக டிசம்பர் இறுதி முதல் பிப்ரவரிக்குள் 3ம் அலை ஏற்படலாம். எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆனாலும், அது அபாயகரமாக இருக்காது. 3வது அலையானது நாடு முழுவதும் பரவாமல் சில பகுதிகளில் மட்டும் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.* ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் மிகவும் குறைவான பாதிப்புகடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் குறைவாக, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7,579 பேர் மட்டுமே புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக பாதித்தவர்கள்    7,579 பேர்மொத்த பாதிப்பு    3.45 கோடிபுதிய பலி    236மொத்த பலி    4.66 லட்சம்சிகிச்சை பெறுவோர்    1.13 லட்சம்…

Related posts

11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு

திருப்பதியில் ரூ.13.45கோடியில் சமையற்கூடம் திறப்பு

வேலையின்மை எனும் நோயை பாஜக பரப்பியுள்ளது: ராகுல்