நோய் எதிர்ப்புக்கு பப்பாளி, எலுமிச்சை

சென்னை: பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பேசியது: மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஊட்டச்சத்தை மேம்படுத்தவும், பார்வைக்கு பப்பாளி, நோய் எதிர்ப்பு சக்திக்கு எலுமிச்சை, இரும்புச்சத்துக்கு முருங்கையும் கறிவேப்பிலையும், கற்பூரவல்லி, திப்பிலி, கற்றாழை, புதினா போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகள் அடங்கிய தளைகள் இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும். இதற்குத் தேவையான 16 லட்சம் மூலிகைச் செடிகள் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படும். வைட்டமின் – சி பெட்டகம் என்றழைக்கப்படும் நெல்லி 200 ஹெக்டரில் சாகுபடி செய்யப்படும். உற்பத்தி செய்யப்படும் மூலிகைச் செடிகள், நெல்லிக்காய்கள் டாம்ப்கால் நிறுவனத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கப்படும்.இத்திட்டத்துக்கு ரூ.2.18 கோடி ஒதுக்கப்படும். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை