நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்து சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகப்பட்டினம்,ஏப்.7: பருவ கால நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகப்பட்டினம் அருகே ஒரத்தூர் சிதம்பரனார் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சிவா தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் பாலசண்முகம் வரவேற்றார். நாகப்பட்டினம் மாவட்ட சுகாதாரத் துறையின் பயிற்சியாளர் மணவாளன் கோடைகாலத்தில் ஏற்படும் நோய்கள் பற்றியும் அதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து பேசினார். சுகாதாரத்துறை தொழில்நுட்ப உதவியாளர் கோகுலநாதன் குளிர்கால நோய்களும் மற்றும் கொசு, ஈக்களால் ஏற்படும் நோய்கள் பற்றி பேசினார். வடவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் சுத்தானந்த கணேஷ் சத்து மாத்திரைகள், தடுப்பூசிகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

Related posts

உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து மனைவி தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவர் காயம் பேரணாம்பட்டு அருகே

மலைவாழ் மக்களின் பாரம்பரிய திருவிழாவில் 3 ஆயிரம் பேர் திரண்டனர் 100 ஆடுகளை பலியிட்டு வீடுதோறும் கறி விருந்து தொங்குமலை காளியம்மன் கோயிலில் கோலாகலம்

ஆடுகளின் விலை உயர்ந்து ₹17 லட்சத்திற்கு வர்த்தகம் ஒரு ஜோடி ₹40 ஆயிரத்துக்கு விற்பனை ஒடுகத்தூர் வாரச்சந்தையில்