நோபிள் சர்வதேச பள்ளி திறப்பு

 

விருதுநகர், ஜூன் 9: விருதுநகர் அருகே நோபிள் கல்வி குழுமத்தின் மற்றொரு புதிய உதயமான நோபிள் இன்டர்நேசனல் பப்ளிக் பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. கல்வி நிறுவன தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம் தலைமை வகித்தார். செயலர் வெர்ஜின் இனிகோ, துணைத்தலைவர் நிஜிஷ் முன்னிலை வகித்தனர். பள்ளியின் புதிய கட்டிடத்தை கல்விக்குழும தலைவர் திறந்து வைத்தார். பள்ளி செயலாளர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

விழாவில் துணைத்தலைவர் நிஜிஷ் பேசுகையில், புதிதாக சேர்ந்த மாணவ, மாணவியர், ஆசிரியர், பெற்றோர் ஒத்துழைப்புடன் வாழ்வில் வெற்றி பெறும் வகையில் வளர்ச்சி பெற கல்வி முறை இருக்க வேண்டுமென தெரிவித்தார். செயலர் பேசுகையில், மாணவர்களை பெற்றோர் உற்சாகப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்காமல் தட்டிக் கொடுத்து வாழ்வில் முன்னேற செய்ய வேண்டும் என்றார். அதை தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியை விபஷா தொகுத்து வழங்கினார். ஆசிரியை லட்சுமி பிரியா நன்றி தெரிவித்தார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை