நேற்று முன்தினம் ஓபிஎஸ் – நேற்று இபிஎஸ் நெல்லையில் அதிமுகவினர் போஸ்டர் யுத்தம்

நெல்லை: நெல்லையில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக நேற்று முன்தினம் போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில், நேற்று இபிஎஸ்க்கு  ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.  ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும்,  இபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகின்றனர். எனினும் இபிஎஸ்,  ஓபிஎஸ் இடையே தொடர்ச்சியாக மோதல் நடந்து வருகிறது. தேர்தலின் போது முதல்வர் வேட்பாளர் தேர்வு, சமீபத்தில் எதிர்கட்சி தலைவர் தேர்வு உள்ளிட்டவற்றில் இருவரது ஆதரவாளர்களும் மோதி கொண்டனர். இவற்றில் இபிஎஸ் கை ஓங்கியதால், தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.  இந்நிலையில் ஓபிஎஸ்சுக்கு மீண்டும்  முக்கியத்துவம் அளிக்கக் கோரி, அவரது ஆதரவாளர்கள் நெல்லை மாவட்டத்தில் மானூர் உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டினர். இதில் எடப்பாடிக்கு எதிரான வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கிடையில் போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக நிர்வாகிகள் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று நெல்லை டவுன், தாழையூத்து  பகுதிகளில் இபிஎஸ்க்கு ஆதரவாக  பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதில், எதிர்க்கட்சித் தலைவராக இபிஎஸ்சை  தேர்ந்தெடுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி  தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தலைவர்களை மையமாக கொண்டு அதிமுகவினர் அடுத்தடுத்து போஸ்டர் யுத்தத்தில் இறங்கியுள்ளதால் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவை வழிநடத்துவோம்தேனியில் பிளக்ஸ் பேனர் தேனி நகராட்சி மாஜி கவுன்சிலர் வைகை கருப்புஜி. அதிமுக பிரமுகரான இவர், கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக, தேனியில் உள்ள மதுரை ரோட்டில் ஒரு பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். அதில், எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா, ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்திரநாத் எம்பி ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், ‘‘அம்மாவின் நல்லாசியோடு அதிமுக என்னும் எஃகு கோட்டையின் பாதுகாவலரே, ஓபிஎஸ் அவர்களே, உங்கள் தலைமையில் கழகத்தை வழிநடத்துவோம்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிளக்ஸ் பேனர் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. நெல்லையில் ஓபிஎஸ் ஆதரவு, எடப்பாடி ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தத்தை துவக்கி உள்ள நிலையில், தேனியிலும் ஓபிஎஸ்க்கு ஆதரவாக வைத்துள்ள பிளக்ஸ் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

Related posts

பாஜகவிற்கு வழிவிட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி: ஒ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

விக்கிரவாண்டியில் இன்றுடன் பரப்புரை ஓய்கிறது