நேற்றிரவு அலுவலகத்தில் அமர்ந்திருந்த ‘ஜிம்’ உரிமையாளர் சுட்டுக் கொலை: தலைநகர் டெல்லியில் பயங்கரம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் ப்ரீத் விஹார் பகுதியில் நேற்றிரவு ‘ஜிம்’ உரிமையாளர் மகேந்திர அகர்வால் (40) என்பவர், தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது அங்கு நுழைந்த முகமூடி அணிந்த 2 பேர், அவரை நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பினர். அங்கிருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த மகேந்திர அகர்வாலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ஜிம் உரிமையாளர் மகேந்திர அகர்வால் தனது குடும்பத்தினருடன் பட்பர்கஞ்ச் பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு 18 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ப்ரீத் விஹாரில் எனர்ஜி என்ற பெயரில் உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வருகிறார். நேற்றிரவு 7.30 மணியளவில், அவரது அலுவலகத்திற்குள் முகமூடி அணிந்த இரண்டு குற்றவாளிகள் நுழைந்தனர். மூன்றாவது குற்றவாளி ஜிம்மிற்கு வெளியே பைக்கில் அமர்ந்திருந்தான். சுமார் பத்து நிமிடங்கள் இடைவெளியில் மகேந்திர அகர்வாலை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்டனர். மகேந்திர அகர்வாலின் தலையிலும் அவரது உடலின் மற்ற பகுதிகளிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. தொழில் போட்டியால் ஏற்பட்ட முன்விரோதம் அல்லது மிரட்டி பணம் பறித்தல் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம். குற்றவாளிகளை தனிப்படை தேடி வருகிறது’ என்று அவர்கள் கூறினர். …

Related posts

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது

ரூ.20 ஆயிரம் லஞ்சம் துணை தாசில்தார், விஏஓ அதிரடி கைது