இந்தியா – இங்கிலாந்து அணிகள் இதுவரை 14 சர்வதேச டி20ல் மோதியுள்ளதில் தலா 7 வெற்றிகளுடன் சமநிலை வகிக்கின்றன. இந்திய மண்ணில் விளையாடிய 6 போட்டியிலும் தலா 3 வெற்றிகள் பெற்றுள்ளன. * 2007, செப். 9ல் நடந்த உலக கோப்பை டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து வேகம் ஸ்டூவர்ட் பிராடு வீசிய ஓவரின் 6 பந்திலும் யுவராஜ் சிங் சிக்சர்களாக விளாசித்தள்ளி உலக சாதனை படைத்தார். * மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இரு அணிகளும் சர்வதேச டி20ல் மோதுகின்றன. * கோஹ்லி அதிகபட்சமாக 12 இன்னிங்சில் 346 ரன் சேர்த்து முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து கேப்டன் மோர்கன் 314 ரன்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.* இந்திய வீரர்களில் கே.எல்.ராகுல் (101*, ஜூலை 3, 2018), ரோகித் (100*, ஜூலை 8, 2018) சதம் அடித்துள்ளனர். இங்கிலாந்து தரப்பில் யாரும் இதுவரை சதம் அடிக்கவில்லை.* விக்கெட் வேட்டையில் இந்திய சுழல் சாஹல் (9 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார்….