நேபாள விமான விபத்து: விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், 14 பேரின் உடல்கள் மீட்பு

காத்மாண்டு: நேபாளம் மலைப்பகுதியில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியது. 22 பேருடன் நேற்று மாயமான நிலையில் விமானம் விபத்தில் சிக்கியது. நேபாள நாட்டின் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து 22 பேருடன் நேற்று காலை தாரா ஏர் என்ற விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமானது. நேபாளத்தின் போக்கராவில் இருந்து ஜோம்சோமுக்கரானுக்க காலை 9:55 மணிக்கு புறப்பட்டு, காலை 10:15க்கு விமானமானது ஜோம்சோமில் தரையிறங்க வேண்டும். இந்நிலையில் விமானம் புறப்பட்ட, 15 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.  விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகளும் 3 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 22 பேர் பயணித்தனர். இந்த விமானத்தை தேடும் பணி நேற்றிலிருந்து நடைபெற்று வந்த நிலையில், நேபாளத்தில் 22 பேருடன்  மாயமான விமானம் மஸ்டங் பகுதியில் உள்ள மலையில் மோதி நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டது. கோவாங்க் கிராமத்தில் உள்ள லாம்சே நதிக்கரை அருகே இருந்த மலைப்பகுதியில்,  இந்த விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதாக, உள்ளூர்வாசிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த விபத்தில், 22 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய இந்தியர்கள், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர்கள். விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 14 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. 14 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக காத்மாண்டுக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  …

Related posts

திருப்பதி கோயில் பிரசாத லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலப்பு: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

`ஏழுமலையானே மன்னிக்க மாட்டார்…’ திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பா?.. மாஜி அறங்காவலர் குழு தலைவர்கள் ஆவேசம்

20 மலையாள நடிகைகளுக்கு மிக மோசமான பாலியல் சித்ரவதை: சிறப்பு விசாரணைக் குழு அதிர்ச்சி