நெல் உட்பட 14 தானியத்துக்கு கொள்முதல் விலை அதிகரிப்பு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி:  நெல் உட்பட  14 வகையான காரிப் பருவ தானியங்களின்   கொள்முதல் விலையை உயர்த்த, ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது தொடர்பாக, கூட்டத்துக்குப் பிறகு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த பேட்டி வருமாறு: நெல், உட்பட 14 வகையான காரிப் பருவ பயிர் தானியங்களின் கொள்முதல் விலை, 2022- 2023ம் நிதியாண்டில் உயர்த்தப்பட உள்ளது. இதன்படி, நெல்லுக்கான குறைந்தப்பட்ச ஆதரவ விலை ரூ.100 உயர்த்தப்படுகிறது.  இதன்மூலம், ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,040 வழங்கப்படும்.  அதேபோல்,  எள்ளுக்கு ரூ 523, பாசி பருப்புக்கு  ரூ. 480, சூரியகாந்தி விதைக்கு ரூ.385 உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.என்எஸ்ஐஎல் நிறுவனத்துக்கு10 செயற்கைக்கோள் உரிமம் ஒன்றிய விண்வெளித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத் துறை நிறுவனம் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் ( என்எஸ்ஐஎல்)  நிறுவனத்துக்கு, விண்ணில் தற்போது சுற்றுப்பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் 10 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களின் உரிமத்தை மாற்றிக் கொடுக்கவும் ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், ரூ.1000 கோடியாக உள்ள இந்த நிறுவனத்தின் பங்கு மூலதனம் ரூ.7,500 கோடியாக உயரும்….

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!