நெல் அறுவடையின்போது நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு: பெண்கள் அலறியடித்து ஓட்டம்

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரம் கிராமத்தில் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இதில், பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் நேற்று 20க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பதுங்கியிருப்பதை பார்த்து அலறியடித்து ஓடினர். உடனே வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வருவதற்கு தாமதமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சென்று அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்….

Related posts

மருதமலை கோயிலில் ரூ.5.20 கோடியில் லிப்ட் அமைக்கும் பணி 70 சதவீதம் நிறைவு

பாலமேடு அருகே டிராக்டர் குறுக்கே வந்ததால் சாலையோரம் பாய்ந்த வேன்: 4 ஆசிரியைகள், டிரைவர் காயம்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு