நெல் அறுவடைக்கு பிறகு பயறு வகைகள் பயிரிடலாம்

சிவகங்கை, ஜன. 29: மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது: நெல் அறுவடை முடிந்த தரிசு நிலத்தில் பயறுவகைகளை சாகுபடி செய்ய வேண்டும். இவ்வாறு, பயிர் செய்யும்போது வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்து மண்ணில் நிலைநிறுத்தப்படுகிறது. பயறுவகைப் பயிர்களை பயிர் செய்ய குறைவான நீரே போதுமானது. மேலும், அடுத்த பயிர் சாகுபடிக்கு தேவையான தழைச்சத்து இயற்கையாகவே கிடைக்கும். திரவ ரைசோபியம், திரவ பாஸ்போ பாக்டீரியா, உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்களை நிலங்களில் இட வேண்டும்.

சம்பா அறுவடைக்குப் பிறகு நீர்ப் பாசன வசதியுள்ள விவசாயிகள் பெரும்பாலும் கோடைகால நெல் சாகுபடி செய்கின்றனர். சம்பா, கோடை என தொடர்ச்சியாக நெல் சாகுபடி செய்வதால் மண்வளம் பெரிதும் பாதிப்படையும். மண்ணின் பிரதான பேரூட்டச் சத்தான தழைச்சத்தை நிலைநிறுத்தி மண்வளத்தைப் பாதுகாக்க உளுந்து, தட்டைப்பயறு, பச்சைப் பயறு போன்றவற்ைற சாகுபடி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை