நெல்லை வந்த சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு: அதிமுகவின் உயிர் மூச்சே என்று தொண்டர்கள் கோஷம்

கேடிசி நகர்: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா கடந்த 2 நாட்களாக தென் மாவட்ட கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார். நேற்று கூடங்குளம் அருகே விசுவாமித்திரர் கோயில், மகாலிங்கசுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் ஆகிய கோயில்களில் சசிகலா சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை 2வது முறையாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், தென்காசி அருகே இலஞ்சி குமார கோயிலுக்கு காரில் புறப்பட்டார். அவருடன் அவரது அண்ணன் மனைவி இளவரசி, அவரது மகன் விவேக் ஆகியோரும் சென்றனர். தென்காசி செல்லும் வழியில் நெல்லை கேடிசி நகர் நான்கு வழிச்சாலையில் பாளை பகுதி அமமுக செயலாளர் ரமேஷ் தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.  பின்னர் கொக்கிரகுளம் வந்த அவர், அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அவருக்கு தாரை, தப்பட்டை முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த அமமுக தொண்டர்கள் அதிமுகவின் உயிர் மூச்சே என்று கோஷம் எழுப்பினர். பின்னர் அங்கு நின்ற தொண்டர்களிடம் சசிகலா பேசினார். அப்போது தச்சை பகுதி அமமுக செயலாளர் துவரை பேச்சிமுத்து, சசிகலாவுக்கு வெள்ளி வாள் பரிசாக வழங்கினார். மூதாட்டி ஒருவர் அழைத்து வந்த பேரனுக்கு சசிகலா பெயர் சூட்டினார். நிகழ்ச்சியில் மாஜி இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பு, தச்சை பகுதி அமமுக செயலாளர் துவரை பேச்சிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் மணிமூர்த்தீஸ்வரம் ஆறுமுகம், முன்னாள் அமமுக அவைத்தலைவர் ஆறுமுகம், வக்கீல் சுந்தரராஜ், அதிமுக எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் கேபிஆர் கிருஷ்ணன், அமமுக மாவட்ட அவைத்தலைவர் கோட்டூர் ஆமீன், தாழையூத்து பூல்பாண்டி, கபடி கனி, சுரேஷ்குமார், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் வெண்மதி, கணேஷ்பாண்டியன்,  அமமுக எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் ராஜகோபால், சுப்பிரமணிய ராஜா, பிச்சுமணி, பொன்னுசாமி, சீனிவாசன், வெண்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் சசிகலா இலஞ்சிக்கு புறப்பட்டு சென்றார்….

Related posts

ஆட்சியில் பங்கு கேட்கும் சூழலே எழவில்லை: திருமாவளவன் பேட்டி

ஆட்சியை காப்பாற்றவே பாஜவுடன் இபிஎஸ் கூட்டணி: அதிமுக அவைத்தலைவர் பேச்சு

ஒரு கோடி இலக்காம்… சேர்ந்ததோ வெறும் அஞ்சு லட்சம்தானாம்… தமிழகத்தில் பாஜ உறுப்பினர் சேர்க்கையில் கடும் பின்னடைவு: இளைஞர்கள் பெயரளவுக்கு கூட திரும்பிப் பார்க்கவில்லை; பாஜ மேலிட பொறுப்பாளர் கடும் அதிருப்தி