நெல்லை மாவட்டத்தில் 92 பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவு-3 மாணவர்கள் பலியை தொடர்ந்து கலெக்டர் நடவடிக்கை

நெல்லை : நெல்லை சாப்டர் பள்ளியில் கழிப்பறை கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாயினர். காயமடைந்த மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியை பெர்சிஸ் ஞானசெல்வி, தாளாளர் செல்வகுமார், ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சம்பவத்தை தொடர்ந்து, தலைமை ஆசிரியை பெர்சிஸ் ஞானசெல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஜேசுராஜ், அருள் டைட்டஸ், சுதாகர் டேவிட் ஆகிய 4 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டத்தில் தீராத சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளை ஆய்வு செய்ய 14 குழுக்களும், மாநகரத்தில் 4 குழுக்களும் என மொத்தம் 18 குழுக்கள் அமைத்து கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இந்தக் குழுவினர் கடந்த 2 நாட்களாக ஆய்வு நடத்தி கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதன் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் 92 பள்ளி கட்டிடங்கள் மோசமான நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கட்டிடங்களை 3 நாட்களில் இடித்து அப்புறப்படுத்த கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மோசமான பள்ளி கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தும் பணி நேற்றே துவங்கியது. நேற்று மட்டும் 8 பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. அடுத்த 2 நாட்களில் மோசமான நிலையில் உள்ள எஞ்சிய பள்ளி கட்டிடங்களும் இடித்து அப்புறப்படுத்த உள்ளன….

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்