நெல்லை புத்தக திருவிழாவில் போட்டி தேர்வு புத்தகங்கள் வாங்க மாணவர்கள் ஆர்வம்

நெல்லை :  பாளையில் நடந்து வரும் புத்தக திருவிழாவில் நேற்று போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை வாங்குவதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.நெல்லை பொருநை புத்தக திருவிழா பாளை வ.உ.சி. மைதானத்தில் கடந்த 17ம்தேதி முதல் நடந்து வருகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்பதோடு புத்தக திருவிழாவில் இடம்பெற்றுள்ள புத்தக, கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.8ம் நாளான நேற்று காலை முதலே நெல்லை மாநகர பகுதிகள் மட்டுமின்றி பேட்டை, வெள்ளங்குளி, வீரவநல்லூர், சாத்தான்குளம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படையெடுத்து வந்தனர். வெளியூர்களில் இருந்து வரும் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக அழைத்து வரப்பட்டனர். இதனால் புத்தக திருவிழாவின் அனைத்து அரங்கங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக காட்சியளித்தனர். வெயிலையும் ெபாருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து புத்தக திருவிழாவை பார்வையிட்டுச் சென்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புத்தக அரங்கு, போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் விற்கப்படும் அரங்குகள் உள்பட பல புத்தக அரங்குகளையும் பார்வையிட்டு வாங்கிச் சென்றனர். தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக புத்தக அரங்கில் இருந்த ஊழியர்களிடம் அங்குள்ள புத்தகங்கள் பற்றி கேட்டபோது, ”இங்கு 6 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களுக்குமான தமிழ், ஆங்கிலவழி பாடப் புத்தகங்கள், பட்டப்படிப்பு மாணவர்களுக்கான புத்தகங்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கான புத்தகங்களும் உள்ளன. இங்கு குழந்தை, இளையோர் மற்றும் உடற்கூறு சார்ந்த உளவியல் புத்தகங்கள், கால்டுவெல் எழுதிய திராவிட அல்லது தென்னிந்திய குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம், வஉசி எழுதிய திருக்குறள் உரை, தொல்லியல் துறையின் கீழடி, பொருநை நாகரிகங்கள் குறித்த புத்தகங்கள் உள்ளிட்ட பல நாட்டுடைமை ஆக்கப்பட்ட புத்தகங்களும் உள்ளன. டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்காக 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் உள்பட பிற பொதுவான புத்தகங்களும் விற்பனைக்கு வைத்துள்ளோம்” என்றனர்.புகைப்பட கலை பயிற்சிபுத்தக  திருவிழாவின் ஒரு பகுதியாக நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் பள்ளி,  கல்லூரி மாணவர்களுக்கு நேற்று புகைப்பட கலை குறித்து பயிற்சி  அளிக்கப்பட்டது. புகைப்பட கலைஞர் ரோகிணி முத்துராம் பயிற்சியை நடத்தினார்.  இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு பல்வேறு விதமான புகைப்பட கருவிகள், அவற்றை  பயன்படுத்தும் முறை, புகைப்படங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. …

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்