நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் இன்று அதிகாலை சாரல் மழை

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில் இன்று அதிகாலை பரவலாக சாரல் மழை பெய்து குளிர்வித்தது. தென்தமிழக கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மாலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 3 மாவட்டங்களிலும் நேற்றும் பகலில் வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் இன்று அதிகாலை தட்ப வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டது. நெல்லை மாநகரில் அதிகாலை 5 மணிக்கு சில இடங்களில் மெல்லிய சாரல் மழை பெய்தது. பின்னர் வானம் மேகமூட்டமாக இருந்தது. கல்லிடைக்குறிச்சி, அம்பை, சேரன்மகாதேவி, தென்காசி மாவட்டம் ஆலங்குளம், சுரண்டை, புளியங்குடி உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது. இதுபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் சாரல் மழை பெய்தது. இதனால் காலை நேர வெப்பம் ஓரளவு தணிந்தது….

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்