நெல்லை: நெல்லை அருகே எலக்ட்ரிக் பைக் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே விகேபுரம் பசுகிடைவிளை அம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த் (45). இவர் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஆனந்த் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு எலக்ட்ரிக் பைக் வாங்கி உள்ளார். நேற்று மதியம் தனது வீட்டின் அருகே எலக்ட்ரிக் பைக்கை நிறுத்திவிட்டு ஆனந்த் தண்ணீர் கேன்களை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பைக் தீப்பிடித்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் பைக் முழுவதுமாக எரிந்து நாசமானது….
நெல்லை அருகே எலக்ட்ரிக் பைக் எரிந்து நாசம்
previous post