நெல்லையில் மின்சாரம் தாக்கி பலியான சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

நெல்லை, ஜூலை 29: நெல்லை வண்ணார்பேட்டையில் மாநகராட்சி தண்ணீர் ஏற்றும் மோட்டார் அறையில் மின்சாரம் தாக்கி பலியான சிறுமியின் உடல் அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு பிறகு பெற்றோரிடம் கடந்த 28ம்தேதி மாலை ஒப்படைக்கப்பட்டது. நெல்லை வண்ணார்பேட்டை அம்பேத்கர் குடியிருப்பு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது 2வது மகள் சத்யா (7). உடையார்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 26ம்தேதி மாலையில் தெருவில் விளையாடி கொண்டிருந்தவர் திடீரென கைகளை கழுவ அருகில் இருந்த மாநகராட்சி தண்ணீர் ஏற்றும் அறையில் உள்ள குழாயை தொட்டபோது மின்சாரம் தாக்கி பலியானார். இதுகுறித்து பாளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் விபத்துக்கு காரணமான மாநகராட்சி அதிகாரிகள், மின்வாரிய பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நிவாரண நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சக்திவேல் மற்றும் அவரது உறவினர்கள், சிறுமியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் சிறுமியின் தாய்க்கு மாநகராட்சியில் தற்காலிக வேலை வழங்கவும், மின்சார விபத்து குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சிறுமியின் உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்