நெற்பயிரில் இலைச்சுருட்டு நோய்-கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி டிப்ஸ்

சின்னமனூர் : சின்னமனூர் பகுதியில் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முல்லைப்பெரியாறு பாசனத்தில் முதல் போக நெல் நடவு செய்யப்பட்டு பயிர் வளர்ந்துள்ளது. இப்பயிரில் இலைச் சுருட்டுப்புழு தாக்குதல் நோய் தென்படுகிறது. இதை கட்டுப்படுத்த சின்னமனூர் உதவி வேளாண்மை இயக்குனர் பாண்டி கூறியிருப்பதாவது:  நெற்பயிர்கள் கதிர்விடும் நிலையில் இலைச்சுருட்டல்  நோய் தென்படுகிறது. இதை கட்டுப்படுத்த 30 கிராம் அக்ரிமைசின் 100 பிளஸ் 200 கிராம் பைடோலான் ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து விசைத் தெளிப்பான் மூலமாக தெளிக்க வேண்டும். மேலும், வயல்வெளியில் புல் பூண்டுகளை அகற்ற வேண்டும். மாலை நேரங்களில் விளக்குப்பொறிகள், இனக்கவர்ச்சி பொறிகள் பயன்படுத்தி பூச்சிகளை கண்காணித்து தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். இலை சுருட்டுப்பு புழு தாக்குதல் அறிகுறிகள் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளில் நீளவாக்கில் மடித்து சேதத்தை ஏற்படுத்துகின்றன. உட்பக்கமாக சுருட்டி உள்ளிருந்து பச்சையத்தை சுரண்டி உண்பதால், ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு இலைகள் காய்ந்த நிலையில் காணப்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த  தழைச்சத்து தேவை அதிகமாகவோ அல்லது ஒரே தடவையாக போடாமல் பிரித்து சரியான அளவிட வேண்டும்.அசாடிராக்டின் 0.03 சதம் 1,000 மில்லி எக்டர் அல்லது வேப்பங்கொட்டைச்சாறு 5 சதம் பயன்படுத்தலாம். பூச்சிகளின் தாக்குதலை கண்காணித்து பொருளாதார சேத நிலை அதிகமாக இருந்தால் தேவைப்படும் பட்சத்தில் ரசாயண பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தலாம். பிப்ரோனில் 5 சதம் எஸ்சி 1000 கிராம் அல்லது புளூ பெண்டமைடு  20 சதம் டபுள் சி 120 கிராம் அல்லது தயோமீத் தாக்சிம் 25 சதம் 100 கிராம் எக்டேர் அல்லது கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50 சதம் எஸ்பி 1000 கிராம் எக்டர் என்ற  அளவில் ஏதேனும் ஒரு மருந்தை பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். …

Related posts

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா