நெருங்கியது கோடை சீசன் சுற்றுலா மற்றும் தோட்டக்கலைத்துறை மேம்பாட்டு பணிகளில் மும்முரம்

ஊட்டி: கோடை சீசன் நெருங்கிய நிலையில் சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மேம்பாட்டு பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. மலை மாவட்டமான நீலகிரிக்கு கோடை சீசனான மார்ச் முதல் மே முடியும் வரை சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளால் நீலகிரி மாவட்டமே திணறும். சுற்றுலாத்தலங்கள், ஓட்டல்கள், பஸ் நிலையங்கள், ஊட்டி – கோவை சாலை என எங்கு பார்த்தாலும் வாகனங்கள் மற்றும் மக்கள் கூட்டமே காட்சியளிக்கும். குறிப்பாக, அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் சிரமத்திற்குள்ளாவார்கள். நீலகிரி மாவட்டத்தில் தற்போது அனைத்து சுற்றுலா தலங்களிலும் நடைபாதைகள், விளையாட்டு சாதனங்கள், படகுகள், இருக்கைகள், தங்கும் விடுதிகள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. படகு இல்லத்தில் பழுதடைந்த படகுகள் சீரமைக்கும் பணிகள், வர்ணம் பூசும் பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகையை முன்னிட்டு சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை தற்போது மேம்பாட்டு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. தற்போது ரோஜா பூங்கா செல்லும் சாலையோரங்களில் உள்ள அலங்கார வேலிகள், தடுப்புச்சுவர்கள், நுழைவு வாயில் ஆகியவை வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், பல்வேறு தனியார் பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் ஆகியவைகளும் சீரமைக்கும் பணிகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், அனைத்து தனியார் காட்டேஜ்கள் மற்றும் லாட்ஜ்கள் போன்றவற்றையும் புதுப்பிக்கும் பணிகளில் அவற்றின் உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்….

Related posts

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை

திருப்பத்தூர் அருகே கணவரின் தகாத உறவால் குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கைது: ராணுவ வீரரிடம் போலீசார் விசாரணை

புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் வாங்கி குடித்த முதியவர் சாவு