நெடுஞ்சாலை துறையில் ரூ.5 ஆயிரம் கோடி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘நெடுஞ்சாலைத்துறையில் ₹5 ஆயிரம் கோடி விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்காமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘நெடுஞ்சாலைத்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதலை கோட்டையில் முடியும் ஊர்க்காரரின் முனிவர் அர்த்தம் கொண்ட ஒரு நிறுவனத்திடம் வழங்கி உள்ளனராம். சாலையில் பதிக்கும் ரிப்ளக்டர்  விளக்குகள், ஊர் பெயர் பலகை, எச்சரிக்கை பலகை வரையில், பழசை பயன்படுத்தி ஆண்டுக்கு ₹500 கோடி செலவிட்டதாக 10 ஆண்டுகளில் மேற்கண்ட நிறுவனம் மற்றும் அதன் போலி நிறுவனத்திற்கு ₹5,000 கோடி வரை  வழங்கியிருக்காங்களாம். இதற்கு நெடுஞ்சாலைத்துறையின் எந்த அலுவலகத்திலும் முறையான ஆவணங்கள் இல்லையாம்… ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த விக்கியானந்தா தெரிவித்த தகவலை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையில்  இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்காம்.முதல்கட்ட விசாரணையில் 2017-18ல் வழங்கப்பட்ட டெண்டரிலேயே சாலைகளில் பதிக்கப்படும் சுமார் ₹100 விலையிலான சாதாரண ரிப்ளக்டரை ₹414க்கும், ₹600 மதிப்பிலான சோலார் ரிப்ளக்டரை ₹3,050, ₹500 மதிப்பிலான டெலினேட்டர்  ₹2,215க்கும், 45 செ.மீ கனத்திற்கு ₹800க்கான அலுமினிய தகடுகளை ₹3,342, ₹10 கூட மதிப்பு பெறாத சிவப்பு ஸ்டிக்கருக்கு ₹80, ₹2 ஆயிரம் பெறாத ஊர் பலகை, எச்சரிக்கை பலகைக்கு ₹11,046 என வாரி வழங்கியிருக்காங்களாம்… மாநிலம் முழுவதும் 10 ஆண்டுகளில் கழற்றிய பெயர் பலகை போர்டுகள், சாலையோர தடுப்பு அலுமினிய தகடுகள் பழைய பொருட்கள் இருப்பு கேட்டு இருக்காங்களாம். பழசை விற்றால் கூட ₹ஆயிரம் கோடி கிடைக்குமாம். ஆனால் மாநிலம்  முழுவதும் ஏற்கனவே இருந்த பழசு மேலயே பெயிண்ட் அடிச்சி புதுசுன்னு காட்டியிருக்காங்களாம்… இதனால சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நிறுவனத்தினர் என்ன நடவடிக்கை இருக்குமோ என அச்சத்தில் இருக்காங்களாம்..’’  என்றார்  விக்கியானந்தா.  ‘‘இலை ஆட்சியில் ராஜ்யமாக இருந்த தனி தாசில்தார் ஏஜெண்டு ஆட்சி மாற்றத்தால் ஆட்டம் கண்டு உள்ளாராமே…’’ ‘‘இலை  ஆட்சியில் கடலோர மாவட்டத்தில் இருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட  38வது மாவட்டத்தில் கடந்த ஆட்சியில் முதியோர், விதவை உதவித்தொகைகளுக்கு  தாசில்தார் அலுவலகத்தில் உள்ள நலிந்தோர் நலத்திட்ட  தனிவட்டாட்சியர்  அலுவலகத்தில் உள்ள கடைசி பெயர் ராம் பெயர் கொண்ட ஏஜெண்டின் ராஜ்யம் தான்  தலைவிரித்தாடியதாம்… தனி தாசில்தாரராக யார் வந்தாலும் இந்த ஏஜெண்ட்  வைத்ததுதான் சட்டமாம்.. அதிகாரிகள் கேட்பதற்கு  முன்பாகவே அவர்களது தேவைகளை  தெரிந்து கொண்டு உடனடியாக பூர்த்தி செய்வதில் ஏஜெண்ட் கில்லாடியாம்.. நாம்  கை நீட்டினால்தான் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்குவோம்… ஏஜெண்ட் மூலமாக  பணம் வந்தால் எந்த தொந்தரவும்  இருக்காது என தனிதாசில்தார் நினைத்து  விடுகின்றனர். இதில் விண்ணப்பம் செய்தவர்களிடம் மட்டுமில்லாமல்  உதவித்தொகை பெற்றவர்களின் உதவித்தொகையையும் நிறுத்துவது அதன்பிறகு அவர்களை  அலுவலகத்திற்கு வரவழைத்து  அவர்களிடம் இருந்து ₹2 ஆயிரம் முதல் ₹3  ஆயிரம்வரை கையூட்டு பெற்றுக்கொண்டு மீண்டும் அவர்களுக்கு உதவித்தொகை  அனுப்புவது என ஜெகஜால கில்லாடித்தனத்தில் கைதேர்ந்தவராக ராம் பெயர் கொண்ட  ஏஜெண்டு இருந்து  வருகிறாராம்… முதியோர், விதவை உதவித்தொகைக்கு பரிந்துரை  செய்யும் கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களின் மனுக்களை அப்படியே  குப்பைக்கு அனுப்பி விடுவாராம் ஏஜெண்டு. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள்  புகார்  அளித்தாலும் சம்பந்தப்பட்ட ஏஜெண்டு மீது எந்த நடவடிக்கையும்  தனிதாசில்தார் எடுக்கமாட்டாராம்… ஆனால் தற்போது ஆட்சி மாற்றத்தால் இலை  ஆட்சியில் ஆட்டம் போட்ட ஏஜெண்ட் தற்போது ஆட்டம் கண்டு போய் உள்ளாராம் என   தாசில்தார் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறதாம்’’  என்றார் விக்கியானந்தா.  ‘‘தாமரை கட்சிக்கு புதிய தலைவராமே..’’  ‘‘புதுச்சேரி  தாமரை தலைவர் சாமியானவரு, தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கட்சி தலைமை  அறிவுறுத்தியது. இதனை ஒரு தன்மான பிரச்னையாக கருதியவர், தேர்தலில்  போட்டியிட்டே ஆவேன் என அடம்பிடித்தாராம். இதனால்  லாஸ்பேட்டை தொகுதியில்  அசுர பலத்துடன் இறங்கி வேலை செய்தாராம். ‘ப’ விட்டமினை தண்ணீராக இறைத்தும்,  வெற்றி கிடைக்கவில்லை.  அதே நேரத்தில் இந்த முறை டெபாசிட் வாங்கிவிட்டாரு, மேலும் தாமரை போட்டியிட்ட  9  தொகுதிகளில் 6 தொகுதிதான் வெற்றி கிடைத்தது.  தலைவராக  தேர்தலை சந்தித்து தோல்வியடைந்தது பெரும் மன உளைச்சலை  ஏற்படுத்தியுள்ளதாம். அதோடு குறைந்த தொகுதிகளில் தாமரை வெற்றிப்பெற்றதால்,  தன்னுடைய தலைவர்  பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டாராம். அவரது  ஆதரவாளர்கள் கொஞ்சம் வெயிட் பண்ணுவோம் என்று சொன்னார்களாம். ஆனால் வேண்டாம்  என்று கூறிய சாமியானவர் ராஜினாமா கடிதத்தை மேலிடத்துக்கு  அனுப்பிவிட்டாராம்.  இது தற்போது பரிசீலனையில் இருக்கிறதாம். விரைவில்  புதுச்சேரிக்கு புதிய தலைவர் வரப்போகிறாராம். தாமரை தலைவராக வர  இருப்பவர்களுக்கு ஆட்சியில் அதிக முக்கியத்துவம் என்பதால் தாமரை  எம்எல்ஏக்கள் பதவியை கைப்பற்ற  போட்டி நிலவுகிறதாம்’’ என்றார்  விக்கியானந்தா. உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர், முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணிக்கு வேண்டியவராம். கொரோனா காலத்தில் தனக்கு ஏதாவது பணி நியமித்து விடுவார்கள் என பயந்து, தனது கணவருக்கு  உடல்நிலை சரியில்லை எனவே அவர் பணி செய்யும் வடகிழக்கு மாநிலம் செல்வதாக இ.எல் போட்டுவிட்டு தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்தில் தங்கியுள்ளாராம். அங்கு அவருக்கு வேண்டிய ஆய்வாளர்களை வரவழைத்து  மாதாந்திர மாமுல் வசூல் செய்து கொண்டிருக்கிறாராம். தனக்கு வேண்டிய ஆய்வாளர்களை அவர்கள் கேட்கும் இடத்திற்கு போஸ்டிங் போடுவதற்கு பெரும் தொகை பெற்று சென்னை தலைமையகத்துக்கு உத்தரவு பிறப்பித்து வருகிறார். இவர்  நிர்வாகப் பிரிவு பார்ப்பதால் காவலர்கள், எஸ்ஐ, இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி போன்ற பதவிகளை பெரும் பணம் பெற்றுக் கொண்டு போஸ்டிங் போடுவதாகவும் குற்றச்சாட்டுகள் வருகிறதாம். ஆளும் கட்சிக்கு பணம் சப்ளை செய்த விவகாரத்திலும்  இவரது பெயர் தேர்தல் நேரத்தில் அடிபட்டதாம்.  25 நாட்கள் தற்பொழுது விடுமுறையில் இருக்கும்போதும் அரசு வாகனத்தை ஒப்படைக்காமல் தனது சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்கிறார் என்கின்றனர் அதிகாரிகள். …

Related posts

ஒரு மாதத்தில் இலை கட்சியில் மாற்றம் வரும் என நிர்வாகிகளுக்கு வைத்தி ‘டானிக்’ கொடுத்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

இலை கட்சியில் ரெண்டாம் கட்ட தலைவர்களுக்குள் பிளவு ஏற்படும் நிலை வந்திருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

நிக்காம போன ரயிலு… இதுதான் ஒன்றியத்தின் லட்சணம் என்கிறார்: wiki யானந்தா