நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க எதிர்ப்பு சாலைப்பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

பெரம்பலூர், ஜூன்.11: நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவைக் கைவிடக்கோரி பெரம்ப லூரில் தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் கருப்புக்கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் துறை மங்கலம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறி யாளர் அலுவலகம் அருகே நேற்று காலை 10:50 மணிக்கு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், கிராமப்புற இளைஞர்களுக்கு நெடுஞ் சாலைத்துறை சாலை பராமரிப்புப் பணிகளில் வேலை வழங்க வேண்டும்.

மாநில நெடுஞ் சாலை ஆணையம் அமைப் பதன் மூலம் 3500 -க்கும் மேற்பட்ட சாலைப் பணியா ளர், சாலை ஆய்வாளர் பணியிடம் ஒழிக்கப்படும் அபாயம் உள்ளதால் நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். சுங்கச் சாவடி அமைத்து சுங்க வரியை தனியார்வசூலிக்க அனுமதிக்கக் கூடாது. சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதிய மாற்றம் ரூ 5200, ரூ 20,000 தர ஊதியம் ரூ1900 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக் கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் பெரம்பலூர் கோட்டத் தலைவர் ராஜ் குமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பி னர் பழனிச்சாமி, கோட்ட துணைத் தலைவர்கள் கருணாநிதி, மதியழகன், கோட்ட இணை செயலாளர் கள் ராஜா, காட்டு ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டச் செயலாளர் சுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில இணைச் செயலாளர் கருணாநிதி சிறப்புரையாற்றினார். மாநில துணைத்தலைவர் மகேந்திரன் நிறைவுறையாற்றினார். இந்த ஆர்ப் பாட்டத்தில் சங்க நிர்வாகி கள் 20பேர் கலந்து கொண்டனர். கோட்ட பொருளாளர் சுப்ரமணியன் நன்றி தெரிவித்தார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை