நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த குடியரசு தலைவருக்கு 30ஆம் தேதி அறுவை சிகிச்சை

டெல்லி: நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மார்ச் 30ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த்  லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்அவர் மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று மதியம் மாற்றப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.நெஞ்சுவலியால் அவதிப்பட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராணுவ மருத்துவமனையில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். இதையடுத்து, மார்ச் 30ஆம் தேதி காலை அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கூறியுள்ளது….

Related posts

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் 121 பேர் இறந்த நிலையில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய சாமியார் தலைமறைவு

“அடுத்த 20 ஆண்டுகளுக்கும் பாஜக ஆட்சி தான்” – மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு