நூல், பருத்தி விலை உயர்வால் நசிந்த ஜவுளித் தொழிலை மேம்படுத்துவது எப்போது? ஒன்றிய அரசுக்கு எம்பி. தயாநிதி மாறன் கேள்வி

புதுடெல்லி: நூல், பருத்தி விலை உயர்வால் நசிந்து போன ஜவுளித் தொழிலை மேம்படுத்துவது எப்போது? என ஒன்றிய அரசுக்கு திமுக எம்பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார். கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து, முன்பு எப்போதும் இல்லாத அளவில் பருத்தி, நூல் விலை உயர்ந்துள்ளதால் தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் கடுமையாக பாதித்துள்ளது. கடந்த 2021 தேர்தலின்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கு மண்டல மாவட்டங்களுக்கு பிரசாரத்திற்கு சென்ற போது, பருத்தி, நூல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இன்னல்கள் குறித்து ஜவுளித் தொழிலாளர்கள் அவரிடம் தெரிவித்து, தங்கள் குறைகளை தீர்க்கும்படி கோரினர். இப்பிரச்னை பற்றி ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பலமுறை கடிதம் எழுதியுள்ளார். 18.01.2022 அன்று ஜவுளித் துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கும், 16.05.2022 அன்று பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில், * பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும். சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் பங்கு பெற ஏதுவாக தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்தி குறைந்தப்பட்சம் 500 பருத்தி பேல்கள் போதுமானது என்ற வகையில் வணிக விதிமுறைகள், நிபந்தனைகளை சீரமைக்க வேண்டும். * பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர்-  மார்ச் வரை 5% வட்டி மானியத்தை நூற்பாலைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்.* 2020, ஆண்டு நவம்பர் – டிசம்பர் முதல் 2021, நவம்பர்-டிசம்பர் வரை நூல் விலை உயர்வில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றத்தினையும், உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தையில் நிலவிடும் விலையினையும் சுட்டிக்காட்டி இந்த நிலைமை கட்டுப்படுத்தப்படாவிட்டால், ஏராளமான விசைத்தறிகள், ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி தொழிலகங்கள் இயங்குவது விரைவில் சாத்தியமற்றதாகி விடும்.* இதன் விளைவாக மாநிலத்தில் பெரிய அளவிலான வேலையின்மை, தொழில் துறை அமைதியின்மை ஏற்படும். இந்த ஆபத்தான நிலைமையை சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். – என்பது உட்பட கோரிக்கைகளை விடுத்தார். மேலும், மத்திய சென்னை நாடாளுமன்ற  உறுப்பினர் தயாநிதி மாறன் மேற்கு மண்டலத்திற்கு 2021 தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற போதும் இது தொடர்பான கோரிக்கை மனுக்களை பலர் முன்வைத்தனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சகத்திடம் மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக தயாநிதி மாறன் எம்பி கேள்வி எழுப்பினார்.அதன் விவரம் பின்வருமாறு:* பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளித்தொழில் கடுமையாக பாதித்துள்ளதை ஒன்றிய அரசு கவனத்தில் கொண்டுள்ளதா? அவ்வாறெனில், அப்பிரச்னைகளுக்கு தீர்வு காண ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?* அனைத்து நூற்பாலைகளுக்கும் பருத்தி, நூலுக்கான கையிருப்பு, தரவுகளின் இருப்பு மற்றும் சந்தைகளின் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை ஒன்றிய அரசு உறுதி செய்யுமா? அவ்வாறெனில், அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.* ஆண்டில் 8 மாதங்களுக்கு நூற்பாலைகள் பருத்தி கொள்முதல் செய்வதற்கான ரொக்க கடன் உச்சவரம்பை ஒன்றிய அரசு அதிகரிக்குமா? அது குறித்த திட்டங்கள் ஏதேனும் உள்ளதா? அவ்வாறெனில், அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.* தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் சார்ந்த குறுசிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்படுவது குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் ஆய்வு அல்லது அறிக்கை தயாரித்துள்ளதா? அவ்வாறெனில், அத்தகைய நிறுவனங்களின் மறுமலர்ச்சிக்கு ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?* இந்தியாவிற்குள் மதிப்பு கூட்டல், உற்பத்திக்கான பயன்பாட்டை உறுதி செய்வதற்காக மூலப்பொருட்களின் ஏற்றுமதி கட்டுப்படுத்தபடுமா? அவ்வாறெனில், அதன் விவரங்களை தெரியப்படுத்தவும். இவ்வாறு  அவர் கேள்வி எழுப்பியுள்ளார்….

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்: 4 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அச்சம்

ஹிஸ்புல்லா தலைவர் கொலையை கண்டித்து ஸ்ரீநகரில் ஷியா பிரிவினர் போராட்டம்: மாஜி முதல்வர் பிரசாரம் ஒத்திவைப்பு