நூலகம் கட்ட வலியுறுத்தி கலெக்டரிடம் மனு

தேனி, ஆக.8: மந்திசுனை கிராம மக்கள், ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றி நூலகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர். கடமலைக்குண்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மந்திசுனை கிராம மக்கள் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்பதாவது : மந்திசுனை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. இந்த இடத்தில் நூலகம் மற்றும் கால்நடை மருத்துவமனை கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான தீர்மானமும் ஊராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, அரசு காலியிடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த இடத்தில் நூலகம் மற்றும் கால்நடை மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது