நூறுநாள் வேலை வழங்கக்கோரி கோவில்பட்டி யூனியனை பெண்கள் முற்றுகை

கோவில்பட்டி, ஜூலை 2: நூறு நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் முறையாக வேலை வழங்கக்கோரி கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். கோவில்பட்டி யூனியனுக்கு உட்பட்ட பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் நூறு நாள் வேலை வழங்கப்பட்டு வந்தது. 2 பணித்தள பொறுப்பாளர்கள் தலைமையில் தலா நூறு பேர் என மொத்தம் 200 பேர் வேலை பார்த்து வந்தனர். தற்போது 10 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் முறையாக வேலை வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி யூனியன் அலுவலகத்திற்கு திரண்டுவந்த பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்தை சேர்ந்த பெண்கள் திடீரென முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், அனைவருக்கும் வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பிறகே அனைவரும் அங்கிருந்து கலைந்து ச் சென்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை