நூதன முறையில் நகை திருட்டு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோமளா (62). இவர் அதே பகுதியில் மாவு அரைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை போலீசார் எனக்கூறி இருவர் கோமளாவிடம் வந்துள்ளனர். அப்போது முதியோர்களிடம் கத்தியைக் காட்டி நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் செல்கின்றனர். எனவே உங்கள் கழுத்தில் இருக்கும் தங்க நகையை கழற்றி காகிதத்தில் மடித்து வைத்துக் கொள்ளுங்கள் என அறிவுரை கூறி நடித்துள்ளனர். அதனை நம்பிய மூதாட்டி கோமளா தான் அணிந்திருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியை கழற்றி பேப்பரில் மடித்துள்ளார்.

அப்போது, மேற்கண்ட 2 பேர் அதைக் கொடுங்கள் மடித்து தருகிறோம் என்று கூறி மடித்து கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். அவர்கள் சென்ற பிறகு காகிதத்தில் கற்கள் மட்டும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கோமளா பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து