நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதே வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு

கரூர், ஜூலை 5: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பஸ் நிலைய வளாகத்தில் வாடகை பாக்கி செலுத்தாத பல்வேறு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட கடைகள் லட்சக்கணக்கில் வாடகை செலுத்தாமல் உள்ளனர் எனக் கூறப்படுகிறது. மேலும், கரூர் பஸ் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் 20க்கும் மேற்பட்ட கடைகள் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் லட்சக்கணக்கான ரூபாய் நிலுவையில் வைத்துள்ளதாகவும் தெரிகிறது.அந்த கடைகளுக்கு பலமுறை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கியும் வாடகை செலுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதன் காரணத்தினால், மாநகராட்சி கமிஷனர் சுதா உத்தரவின்பேரில், போலீசார் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள், பஸ் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வந்த 20க்கும் மேற்பட்ட கடைகளை சீல் வைக்கும பணியை மேற்கொண்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, மாநகராட்சி பணியாளர்கள், சீல் வைக்கும் பணி மேற்கொண்டிருந்த போது, ஒரு கடையில் குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகளின் இந்த செயல்பாடு காரணமாக கரூர் பஸ் வளாகம் நேற்று மதியம் பரபரப்புடன் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை