நீலகிரி மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்: ஊட்டியில் இன்று நடக்கிறது

 

ஊட்டி, செப்.20: நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மற்றம் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரின் சிறப்புகளை சாதாரண சாமான்ய மக்களும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் அறிந்திடும் வகையில், கவியரங்கம், கருத்தரங்கம், மாரத்தான் ஓட்டங்கள், மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஆதவரவற்ற இல்லங்களில் உணவு வழங்குதல் போன்ற மக்கள் பயன்பெறும் நிகழ்ச்சிகள, ஒவ்வொரு மாவட்டத்திலும் கழக கொடியேற்று விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை இந்த ஆண்டு முழுவதும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

கடந்த ஜூன் 3ம் தேதி முதல் மாவட்டத்தில் கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற உள்ளது. அதன்படி, தலைமை திமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை குழு தலைவருமான திருச்சி சிவா அறிவிப்பின்படி, (இன்று) 20ம் தேதி ஊட்டியில் உள்ள ஆனந்தகிரி அரங்கில் பிற்பகல் 2 மணிக்கு கருத்தரங்கம் நடக்கிறது. கலைஞர் ஒரு கருவூலம் என்ற தலைப்பில், டி.கே.எஸ்.இளங்கோவனும், கலைஞர் ஓர் அறிவாலயம் என்ற தலைமையில் எம்எல்ஏ எழிலன், கலைஞர் ஒரு அறிவகம் என்ற தலைப்பில் பெருநர் கிள்ளியும், கலைஞர் ஒரு அன்பகம் என்ற தலைப்பில் ஈரோடு சத்தியவதியும், கலைஞர் ஒரு நூலகம் என்ற தலைப்பில் பொள்ளாச்சி சித்திக் ஆகியோரும் உரையாற்றுகின்றனர்.

நம் இதய தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்க நிகழ்ச்சி மிக சிறப்புடன் அமைந்திடும் வகையில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்டத்திலுள்ள தலைமை நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சி முன்னணியினர் உள்ளிட்ட அனைவரும் தவறாது கலந்து கொண்டு தலைவர் கலைஞருக்கு புகழ் சேர்க்க வேண்டும். இவ்வாறு, நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் முபாரக் கூறியுள்ளார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை