நீலகிரி மாவட்டத்தில் மழை தேயிலை மகசூல் அதிகரிப்பு

 

ஊட்டி, ஜூன் 25: நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் சில தினங்கள் பெய்த மழையின் காரணமாக தற்போது அனைத்து பகுதிகளிலும் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் தேயிலை மற்றும் காலை காய்கறி மகசூல் அதிகரிப்பது வழக்கம். இம்முறை தென்ேமற்கு பருவமழை தாமதமாகவே துவங்கியது. எனினும் கடந்த மே மாதம் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சில தினங்கள் கன மழை பெய்தது.

குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இந்த மழையின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மேலும், இம்மாதம் துவக்கம் முதல் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, பந்தலூர் மற்றும் கூடலூர் போன்ற பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஊட்டி, பந்தலூர் மற்றும் கூடலூர் போன்ற பகுதிகளில் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு